இணையதளத்தில் சூப்பர் டீலக்ஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ் நாளை ரிலீஸாகிறது.

Web Desk | news18
Updated: March 28, 2019, 7:48 PM IST
இணையதளத்தில் சூப்பர் டீலக்ஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சூப்பர் டீலக்ஸ்
Web Desk | news18
Updated: March 28, 2019, 7:48 PM IST
சூப்பர் டீலக்ஸ் படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளியான சில மணி நேரங்களிலேயே அதை இணையதளங்களில் வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே பைரஸி பிரச்னை தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால் படம் வெளியாகும் போது சட்டவிரோதமாக ரிலீஸாவதை தடுக்க குறிப்பிட்ட இணையதளங்களுக்கு தடைவிதிக்க கோருவதை சில தயாரிப்பாளர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

ஆரண்ய காண்டம் படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்குமாறு தயாரிப்பு நிறுவனம் டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து நீதிபதி சட்ட விரோத இணைய தளங்களில் சூப்பர் டீலக்ஸ் படத்தை வெளியிட தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழிசை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் - கருணாஸ் ஆவேச பேட்டி

First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...