ஹோம் /நியூஸ் /entertainment /

''முத்து படத்தில் 'ரங்கநாயகி' வேடத்தில் நடிக்க ரஜினி அழைத்தார்'' - மதுவந்தி சொன்னத் தகவல்!

''முத்து படத்தில் 'ரங்கநாயகி' வேடத்தில் நடிக்க ரஜினி அழைத்தார்'' - மதுவந்தி சொன்னத் தகவல்!

முத்து படத்தில் நாயகி வேடத்தில் நடிக்க ரஜினி வாய்ப்பு கொடுத்ததாக மதுவந்தி தெரிவித்துள்ளார்.

முத்து படத்தில் நாயகி வேடத்தில் நடிக்க ரஜினி வாய்ப்பு கொடுத்ததாக மதுவந்தி தெரிவித்துள்ளார்.

முத்து படத்தில் நாயகி வேடத்தில் நடிக்க ரஜினி வாய்ப்பு கொடுத்ததாக மதுவந்தி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான மதுவந்தி, தர்மதுரை, தாராள பிரபு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக செயலாற்றி வருகிறார்.

மதுவந்தியின் யூடியூப் விடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முத்து படத்தில் மீனா நடித்த ரங்கநாயகி வேடத்தில் நடிக்க ரஜினிகாந்த் தன்னை அழைத்ததாகவும் ஆனால் தனக்கு வயது குறைவு என்பதால் தன்னால் நடிக்க இயலவில்லை என்றும் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த பேட்டியில் என் கொள்கை காரணமாக நடிப்பதற்கு என்னை அணுக தயங்குகிறார்களா என எனக்கு தெரியவில்லை. முத்து படத்தில் என் சித்தப்பா (ரஜினிகாந்த்) ரங்கநாயகி வேடத்துக்காக எனக்கு வாய்ப்பு வழங்கினார். அப்போது எனக்கு மிக இளம் வயது. அதனால் என்னால் நடிக்க முடியவில்லை.

என் கல்லூரி நாட்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. ஆனால் என் பாட்டி படிப்பை முடித்ததற்கு பிறகு தான் நடிக்க வேண்டும் என கண்டிப்பாக கூறிவிட்டார்'' என்று பேசியிருந்தார். இந்த விடியோவை ரசிகர்கள் பகிர்ந்து முத்து படத்தில் மீனாவுக்கு பதிலாக மதுவந்தி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என தங்களது கற்பனைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறார்கள்.

First published:

Tags: Rajinikanth