ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வீடா? ஸ்டார் ஹோட்டலா? 53 வது மாடியில் ரூ.48 கோடிக்கு வீடு வாங்கிய மாதுரி தீட்சித்!

வீடா? ஸ்டார் ஹோட்டலா? 53 வது மாடியில் ரூ.48 கோடிக்கு வீடு வாங்கிய மாதுரி தீட்சித்!

மாதுரி தீட்சித்

மாதுரி தீட்சித்

இந்த குடியிருப்பு 5,384 சதுர அடி பரப்பளவில் 7 கார் பார்க்கிங் வசதியுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் மும்பையில் ரூ.48கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  இந்தியில் கொடிகட்டிப்பறந்த நாயகி மாதுரி தீட்சித் எப்போதுமே ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வயதை மீறிய ஒரு நடிகை இருந்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி மாதுரி தீட்சித் தான். தனது அழகு மற்றும் கவர்ச்சியால் திரைப்படங்கள் மற்றும் அவரது நிஜ வாழ்க்கை இரண்டிலும் எப்போதும் பிசியாக இருக்கிறார்.நடிகை மாதுரி தீட்சித் சமீபத்தில் மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். அவரின் புதிய பிளாட் ரூ48 கோடி மதிப்புடையதாகக கூறப்படுகிறது.

  தீபாவளி ரிலீஸ் போட்டியில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் !

  இது மும்பையின் உயர்மட்ட லோயர் பரேல் பகுதியில் உள்ள ஒரு ஆடம்பரமான கட்டிட வளாகத்தின் 53 வது மாடியில் அமைந்துள்ளது என்ற விவரமும் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 28, மாதுரி தீட்சி இந்த வீட்டை பதிவு செய்துள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பெரிய நீச்சல் குளங்கள், ஒரு கால்பந்து மைதானம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, கிளப் மற்றும் பல வசதிகள் இருப்பதாக ஏற்கெனவே இணையத்தில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.


  இங்கு தான் மாதுரி தீட்சித் பிளாட் வாங்கி இருப்பதாக பிரபல ஆங்கில இணையதளம்  செய்தி  வெளியிட்டுள்ளது. இந்த குடியிருப்பு 5,384 சதுர அடி பரப்பளவில் 7 கார் பார்க்கிங் வசதியுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லை இந்த குடியிருப்பை வாங்கிய போது மாதுரி தீட்சித்துக்கு சலுகையும் வழங்கப்படுள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் ஒரு பெண் தனது பெயரில் வீடு வாங்கினால் அவருக்கு முத்திரை வரியில் 1 சதவீதம் சலுகை வழங்கப்படும். எனவே, மாநில வருவாய்த் துறை மாதுரிக்கு 1 சதவீதம் வரி சலுகை வழங்கியதாகவும் ஆங்கில் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bollywood, Trending