EXCLUSIVE: நான் பணம் கேட்டு மிரட்டினேனா?: விஜய் டிவி புகார் குறித்து மதுமிதா விளக்கம்!

விஜய் டிவி அளித்த புகார் குறித்து நடிகை மதுமிதா விளக்கம் அளித்துள்ளார்.

EXCLUSIVE: நான் பணம் கேட்டு மிரட்டினேனா?: விஜய் டிவி புகார் குறித்து மதுமிதா விளக்கம்!
மதுமிதா
  • News18
  • Last Updated: August 21, 2019, 1:01 PM IST
  • Share this:
பிக்பாஸ் குழுவிடம் பணம் கேட்டு மிரட்டவில்லை என்று விஜய் டிவி புகார் குறித்து மதுமிதா விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.


இதில் கடந்த வாரம் நடந்த டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார்.

Also read... பிக்பாஸ் மதுமிதா மீது காவல் நிலையத்தில் விஜய் டிவி புகார்!அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்றும் நிகழ்ச்சி குழு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து நடிகை மதுமிதாவைத் தொடர்பு கொண்டு விஜய் டிவி நிர்வாகம் அளித்த புகார் குறித்து கேட்டபோது, ‘தன்மீது இவ்வாறான புகார் பதிவாகியுள்ளது தெரியாது என்று தெரிவித்தார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தான் நடந்து கொண்டதாகவும் கூடுதலாக நிகழ்ச்சி குழுவிடம் பணம் கேட்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மதுமிதா தன் மீது இவ்வாறான புகார் பதிவாகியிருந்தால் அதற்கான விளக்கத்தை அளிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Also see...

First published: August 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading