முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தீவிரமாக நடைபெறும் அங்கமாலி டைரீஸ் இந்தி ரீமேக் பணிகள்

தீவிரமாக நடைபெறும் அங்கமாலி டைரீஸ் இந்தி ரீமேக் பணிகள்

இயக்குநர் மதுமிதா

இயக்குநர் மதுமிதா

இந்தியில் உருவாகும் அங்கமாலி டைரிஸ் திரைப்படம் மூலம் இந்திக்கு செல்கிறார் அர்ஜுன் தாஸ். 

  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியில் உருவாகும் அங்கமாலி டைரீஸ் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என இயக்குநர் மதுமிதா கூறியுள்ளார். 

மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் அங்கமாலி டைரீஸ். இந்த திரைப்படத்தை இயக்குநர் மதுமிதா இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.  சூரரைப்போற்று திரைப்படத்தை சூரியவுடன் இணைந்து இந்தியில் தயாரிக்கும் அதே தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

இந்தியில் உருவாகும் அங்கமாலி டைரி திரைப்படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ் இந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குனர் மதுமிதா நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

மலையாளத் திரைப்படத்தின் கதையை எடுத்துக்கொண்டு முற்றிலும் புதிய திரைக்கதையை உருவாக்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.  அத்துடன் பார்ட்டி கொண்டாட்டங்கள் என திரைப்படங்களில் இதுவரை காமிக்கப்பட்ட கோவாவை வேறுவிதமாக காண்பித்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Also read... உலகம் முழுவதும் 1100 திரையரங்குகளில் வெளியாகிறது யானை திரைப்படம்

அதிலும் கோவாவின் கிராமத்து பகுதியை இந்திய அங்கமாலி டைரியில் படம் பிடித்து இருப்பதாக கூறுகிறார். இந்த திரைப்படத்தை தவிர இன்னும் 2 இந்தி மற்றும் ஒரு தமிழ் திரைப்படத்தையும் மதுமிதா இயக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Arjun Doss