• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மதுபானக்கடை கமலக்கண்ணனின் குரங்கு பெடல்!

மதுபானக்கடை கமலக்கண்ணனின் குரங்கு பெடல்!

குரங்கு பெடல்

குரங்கு பெடல்

'மதுபானக்கடை’ இயக்குநரின் மிதிவண்டிப்பயணம், ஜிப்ரானின் இசைக் கொண்டாட்டத்தில்' என இப்படத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

  • Share this:
    2012-ல் வெளிவந்த மதுபானக்கடை படத்தை இயக்கியவர் கமலக்கண்ணன். தமிழின் முக்கியமான திரைப்படங்களுள் மதுபானக்கடையும் ஒன்று.

    காக்டெயில், சாந்தினி பார் போன்ற மதுபானத்துடன் தொடர்புடைய பெயர்களை கொண்ட படங்களை எந்தத் தடையும் இன்றி திரையிட்ட தமிழ்நாட்டின் மல்டிபிளக்ஸ்கள் பலவும், மதுபானக்கடை என்ற பெயருக்காகவே அப்படத்தை திரையிட மறுத்தன. ஆனால், அதன் தரத்தை அவர்களின் மறுப்பால் நிராகரிக்க முடியவில்லை.

    மதுபானக்கடை போன்ற நல்ல படங்களை எடுக்கிறவர்கள் அடுத்த ஐந்து வருடத்துக்கு வெளியே வருவதேயில்லை. இதற்கு அவர்கள் காரணமா, இல்லை நமது திரையுலகம் காரணமா, என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. சுமார் ஒன்பது வருடங்களுக்குப் பிறகு ’குரங்கு பெடல்’ என்ற படத்தை, கமலக்கண்ணன் இயக்கியுள்ளார்.

    'மதுபானக்கடை’ இயக்குனரின் மிதிவண்டிப்பயணம், ஜிப்ரானின் இசைக் கொண்டாட்டத்தில்' என இப்படத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ஒன்பது வருட இடைவெளியில் கமலக்கண்ணன் தெளிவுப்பாதையின் நீச தூரம் என்ற படத்தில் நடித்திருந்தார். கோவை கலவரத்தின் நிஜமான பின்னணியை நேர்மையாக சொல்லியிருக்கும் படம் இது. அனைவரும் பார்க்க வேண்டிய படமும்கூட.

    குரங்கு பெடல் படத்தை இயக்குனர் ராசி அழகப்பனின் சிறுகதையை தழுவி கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். ராசி அழகப்பன், கமல் என்ற ஆலமரத்தின் கீழ், அதிகம் அறியப்படாமல் போன, பல விருட்சங்களில் ஒன்று. நல்ல எழுத்தாளர், திறமையான பேச்சாளர், பண்பான மனிதர். அவரது சிறுகதையின் இன்ஸ்பிரேஷனில் குரங்கு பெடல் தயாராகியுள்ளது.

    மதுபானக்கடை போன்று தமிழின் முக்கியமான ஒரு திரைப்படமாக, இந்த குரங்கு பெடல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: