Home /News /entertainment /

6 மொழிகளில் வெளியாகும் மாதவனின் ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்!

6 மொழிகளில் வெளியாகும் மாதவனின் ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்!

மாதவன்

மாதவன்

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழிகளில் படம் வெளியாகிறது. 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
மாதவன் முதன்முறையாக எழுதி, இயக்கியிருக்கும் ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் ஐஎஸ்ஆர்ஓ இல் பணிபுரிந்து வந்தவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். ராக்கெட் தொழில்நுட்பத்தில் வல்லுநர். இவர் நம்நாட்டு ரகசியங்களை வெளிநாட்டுக்கு உளவு சொன்னதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது பெயர், புகழ் அனைத்தும் நாசமானது. பல வருடங்கள் தேசத்துரோகி முத்திரையுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு தன்னை நிரபராதி என நிரூபித்து வெளியே வந்தார். அவரது வாழ்க்கை வரலாறை மாதவன் ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட் என்ற பெயரில் படமாக்கியுள்ளார். இயக்குனராக இது அவருக்கு முதல் படம்.

Also read... சமந்தாவுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல இந்தி நடிகர்!

இந்தப் படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றதுடன் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. படம் 2022, ஏப்ரல் 1 வெளியாகும் என மாதவன் அறிவித்துள்ளார். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழிகளில் படம் வெளியாகிறது

இந்தப் படத்துக்காக மாதவன் படங்களில் நடிப்பதையே தள்ளிப்போட்டு வந்தார். படத்தின் ட்ரெய்லரில் நடிகர் சூர்யாவும் ஒரு காட்சியில் இடம் பெற்றிருந்தது தமிழ் ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Madhavan, News On Instagram

அடுத்த செய்தி