சூப்பர் ஸ்டார் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் மாதவன்!

மாதவன் தற்போது நிஷப்தம், ராக்கெட்ரி: தி நம்பி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

news18
Updated: July 18, 2019, 6:06 PM IST
சூப்பர் ஸ்டார் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் மாதவன்!
நடிகர் மாதவன்
news18
Updated: July 18, 2019, 6:06 PM IST
மலையாளத்தில் ஹிட்டான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் மாதவன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றப் படம் சார்லி. இந்தப் படம் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. சார்லி போன்ற படங்கள் அவரை பாலிவுட் வரை அழைத்துச் சென்றது. தற்போது இந்தப் படத்தை தமிழில் எடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மலையாளத்தில் சார்லி கதாபத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிக்க மாதவனிடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. புதுமுக இயக்குநர் திலீபன் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. சார்லி படம் சிறப்பான கதை காரணமாக மட்டுமல்லாமல், சிறந்த ஒளிப்பதிவு, துணை நடிகர்கள் உள்ளிட்ட காரணங்களால் மாபெரும் வெற்றி பெற்றது.

மாதவன் தற்போது நிஷப்தம், ராக்கெட்ரி: தி நம்பி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Also watch

Loading...

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...