நடிகர் மாதவன் இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தமிழ் மற்றும் இந்தியில் தனக்கென தனி அடையாளத்தை சம்பாதிக்கும் இருக்கும் மேடி, பயங்கர ஸ்டிரெயிட் ஃபார்வேட். தனக்கு தோன்றிய விஷயத்தை மிகவும் தைரியமாக பதிவு செய்து விடுவார். அவரின் பிறந்த நாளான இன்று அவர் குறித்த பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் அனைவரின் கவனமும் பெற்ற வீடியோ தான் 55வது ஃபிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சியில் மாதவனின் thug life மொமண்ட் வீடியோ.
2010-ம் ஆண்டில் நடைபெற்ற 55வது ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட், மாலிவுட்டை சேர்ந்த உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் மாதவனும் கலந்து கொண்டிருந்தார். அப்போது விழாவில் சுவாரசியத்தை கூட்ட தனியாக செக்மெண்ட் ஒன்று வைக்கப்பட்டது. அதை பாலிவுட் ஸ்டார்களான ஷாரூக்கான் மற்றும் சையத் அலிகான் தொகுத்து வழங்கினார்கள். அவர்கள் இருவரும் கூட்டத்தில் இருப்பவர்களில் ஒருவரை எழுப்பி எதாவது கேள்வி கேட்டு கலாய்ப்பார்கள். அதற்கு பதில் இருந்தால் கூறலாம் அல்லது பதிலுக்கு அவர்களை கலாய்க்கலாம். எண்டர்டெயிண்மெண்டுக்காக வைப்பட்ட இந்த செக்மெண்டில் மாதவனை எழுப்பி ஷாரூக் மற்றும் சையத் கேள்வி கேட்பார்கள்.
Happy Birthday R Madhavan: ஹேய் ஹேன்ட்சம்... நடிகர் மாதவனின் கிளிக்ஸ்!
ஆர். மாதவன் என்றால் என்ன அர்த்தம்? என அவர்கள் கேள்வி கேட்க, அதற்கு மேடி செம்ம கூலாக our maadhavan (எங்கள் மாதவன்) என்று விளக்கம் தருவார். ஆனால் ஷாரூக்கும் சையத்தும் அதை கவனிக்க கூட மாட்டார்கள். பின்பு இந்தி படத்தில் வரும் வசனத்தை தமிழில் சொல்லி தர சொல்வார்கள். அதையும் மாதவன் ட்ரை செய்வார், அதற்கும் இருவரும் கலாய்ப்பார்கள். கடைசியில் உங்களுக்கு எங்களை பார்த்து எதாவது சொல்ல வேண்டுமா என இருவரும் மாதவனை பார்த்து கேட்க, அதற்கு விளையாட்டாக திட்டுவது போல் “போங்கடா கிறுக்கு கதாநாயகர்களா” என்று சொல்லி விடுவார்.
இதற்கு அங்கு இருப்பவர்கள் அனைவரும் கைத்தட்டி சிரிப்பார்கள். இந்த வீடியோ மாதவன் ரசிகர்களால்இணையத்தில் மிகப் பெரிய அளவில் வைரலாக்கப்பட்டது. இதே ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சியில் தான் விஜய்யின் கத்தி படத்தின் வில்லன் , பாலிவுட் ஸ்டார் நீல் நிதின் முகேஷ், ஷாரூக் மற்றும் சையத்தை பார்த்து shut-up என்று காட்டமாக சொல்லி இருப்பார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.