Madhavan: 'ஆல் இஸ் வெல்’ அமீர் கானை தொடர்ந்து மாதவனுக்கும் கொரோனா

Madhavan: 'ஆல் இஸ் வெல்’ அமீர் கானை தொடர்ந்து மாதவனுக்கும் கொரோனா

மாதவன் - அமீர் கான்

நடிகர் மாதவன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதை, 3 இடியட்ஸ் கதாப்பாத்திரங்களை குறிப்பிட்டு நகைச்சுவையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    நடிகர் மாதவன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதை, 3 இடியட்ஸ் கதாப்பாத்திரங்களை குறிப்பிட்டு நகைச்சுவையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டன. பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்ததையடுத்து கடந்த அக்டோபடர் மாதம் முதல் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

    Vignesh Shivan-Nayanthara: நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிச்சயதார்த்தம்? வைரலாகும் படம்!

    இந்நிலையில் தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதை கொரோனா தொற்றின் இரண்டாவது அலை என நிபுணர்கள் குஇறிப்பிடுகிறார்கள். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் முறையைப் போலவே, கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மும்பையில் வசித்து வரும் திரை நட்சத்திரங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



    மனோஜ் பாஜ்பாய், கார்த்திக் ஆர்யன், சஞ்சய் லீலா பன்சாலி, ரன்பீர் கபூர், அமீர் கான் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகர் மாதவனுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    19 வருடங்களுக்குப் பிறகு தங்கச்சி பாப்பா பிறந்த மகிழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை!

    நேற்று நடிகர் அமீர்கான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார், இப்போது அவரது 3 இடியட்ஸ் படத்தில் உடன் நடித்த, நடிகர் மாதவன் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. இருப்பினும், அவர் குறைவாக உணராமல், அமீர்கானுடன் தான் நடித்த 3 இடியட்ஸ் கதாபாத்திரங்களைக் குறிப்பிட்டு, கொரோனாவால் தானும் பாதிக்கப்பட்டிருக்கும் விஷயத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் மாதவன்.

    "ஃபர்ஹான் ராஞ்சோவைப் பின்தொடர வேண்டும், வைரஸ் எப்போதுமே எங்களுக்குப் பின்னால் இருக்கிறது, ஆனால் இந்த முறை பிடிபட்டுவிட்டது. ஆனால் ஆல் இஸ் வெல்” என்று குறிப்பிட்டுள்ள மாதவன் அனைவரின் அன்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: