Vikram Vedha Hindi Remake : ஹிர்த்திக்கின் வேதா லுக்கைப் பார்த்ததும் மாதவன் வியந்து பாராட்டியுள்ளார். மாதவனின் ஆரவாரத்தைப் பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதி மட்டும் தக்காளி தொக்கா என்ற ரீதியில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் தயாராகி வருகிறது. ஹிரித்திக் ரோஷன், சயிப் அலிகான் நடிக்கும் இந்தப் படத்தில் ஹிர்த்திக் ரோஷனின் தோற்றத்தை அவரது பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளனர்.
விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக்கை தமிழில் அதனை இயக்கிய புஷ்கர்- காயத்ரியே இயக்கி வருகிறார். படத்தின் முதல் ஷெட்யூல்டை வெளிநாட்டில் படமாக்கினர். ஹிர்த்திக் ரோஷன் இதில் நடித்தார். அப்போது மாதவனும் படப்பிடிப்புதளத்துக்கு சென்று புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.
இரண்டாவது ஷெட்யூல்ட் சமீபத்தில் லக்னோவில் படமாக்கப்பட்டது. மொத்தம் 19 தினங்கள். இந்த இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் சயிப் அலிகான் கலந்து கொண்டார். அந்த புகைப்படத்தை பகிர்ந்த மாதவன், சயிப் அலிகானின் நடிப்பு குறித்து வியந்து பேசினார். இன்று ஹிர்த்திக்கின் வேதா லுக்கைப் பார்த்ததும் மூன்றாவது முறையாக புல்லரித்துள்ளார்.
'இதோ நான் பார்க்க விரும்பிய வேதா. வாவ், ப்ரோ... இது காவியம்' என்று கண்டபடி உணர்ச்சிவசப்பட்டுள்ளார். இத்தனைக்கும் ஹிர்த்திக் ரோஷன் குர்தா அணிந்து தாடி வைத்து கூலிங்கிளாஸ் மாட்டியிருக்கிறார். அப்படியே தமிழில் வேதா விஜய் சேதுபதியின் அதே தோற்றம்.
Now that’s a “Vedha” I do want to see…. Wow bro .. this is EPIC. Damnnnnn❤️❤️😉🤩🤩🤩🤩 https://t.co/jgw9CGAfSE
மாதவனின் ஆரவாரத்தைப் பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதி மட்டும் தக்காளி தொக்கா என்ற ரீதியில் ட்ரோல் செய்து வருகின்றனர். 2022 செப்டம்பர் 30ம் தேதி விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் திரைக்கு வருகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.