பிரேம்ஜி - பிக்பாஸ் ரேஷ்மா இணையும் ‘சத்திய சோதனை’

பிரேம்ஜி - பிக்பாஸ் ரேஷ்மா நடித்து வரும் படத்துக்கு சத்திய சோதனை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேம்ஜி - பிக்பாஸ் ரேஷ்மா இணையும் ‘சத்திய சோதனை’
பிரேம்ஜி | பிக்பாஸ் ரேஷ்மா
  • Share this:
சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த், ரவீனா ரவி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஒரு கிடாரியின் கருணை மனு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று பல விருதுகளையும் பெற்றது.

இந்தப் படத்துக்கு பின்னர் கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல்நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி காமெடி கதையை தயார் செய்திருக்கிறார் சுரேஷ் சங்கையா.

இதில் நாயகனாக பிரேம்ஜி நடித்துள்ளார். அவருடன் பிக்பாஸ் ரேஷ்மா, ஸ்வயம் சித்தா, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். அவருக்கும் பிரேம்ஜிக்கும் இடையே நடக்கும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: இரட்டை ரோஜா சீரியலுக்கு குட் பை சொன்ன ஷிவானி... அவருக்கு பதிலாக சாந்தினி தமிழரசன் ஒப்பந்தம்?

தற்போது இந்தப் படத்துக்கு  ‘சத்திய சோதனை’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டைட்டிலை நடிகர் மாதவன் வெளியிட்டுள்ளார். சமீத் பரத்ராம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சரண் ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பாளராக வெங்கட் பணியாற்றியுள்ளார்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading