Home /News /entertainment /

'விமானத்தில் யாருமே இல்ல': மாதவனின் விநோத அனுபவம்!

'விமானத்தில் யாருமே இல்ல': மாதவனின் விநோத அனுபவம்!

மாதவன்

மாதவன்

அமெரிகி பண்டிட்' என்கிற திரைப்படத்தில் மாதவன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஜூலை 26ம் தேதி அவர் துபாய் சென்றார். 

    நடிகர் மாதவன் அன்மையில் துபாய்க்கு  பயணம் சென்ற நிலையில், தனது அனுபவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    2019ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை முழுமையாக நீங்காமல் உள்ளது.  இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஒருசில நாடுகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என அறிவித்துள்ளன. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், நடிகர் மாதவன் அண்மையில் துபாய்க்கு விமானத்தில் சென்றுள்ளார். அமெரிகி பண்டிட்' என்கிற திரைப்படத்தில் மாதவன் நடித்து வருகிறார். இவருடன் மஞ்சு வாரியர், வினித் சர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஜூலை 26ம் தேதி நடிகர் மாதவன் துபாய் சென்றார். விமானத்தில் மாதவனை தவிர வேறு யாரும்  பயணிக்கவில்லை. விமான நிலையத்திலும் ஒருவரும் இல்லை.

    இதையும் படிங்க: கணவர் தனுஷூக்கு பிறந்தநாள் - கீர்த்தி கொடுத்த சர்ப்ரைஸ்!






     




    View this post on Instagram





     

    A post shared by R. Madhavan (@actormaddy)






    இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில், விமானத்தில் மாதவன் மட்டுமே உள்ளார். அனைத்து இருக்கைகளும் காலியாக உள்ளன. இது குறித்து, “வேடிக்கையானதாக இருந்தாலும் கவலையளிக்கக்கூடியது. இந்த நிலை விரைவில் முடிந்து அனைவரும் அவர்களின் அன்புக்குரியவர்களுடன் இருக்க வேண்டும் என  பிரார்த்தனை செய்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Actor Madhavan, Dubai

    அடுத்த செய்தி