கவிஞர் வைரமுத்துக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தனது தந்தையை நம்புவதாக அவரது மகனும் கவிஞருமான மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துக்கு எதிராக பாடகி சின்மையி உட்பட 17 பேர் சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், கேரளாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஓ.என்.வி. விருது வைரமுத்துக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு, மலையாள நடிகை பார்வதி, பாடகி சின்மையி, கவிஞர் தாமரை உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளதால் அவருக்கு இந்த விருதை வழங்கக் கூடாது என ஒரு தரப்பினரும், வைரமுத்துக்கு இந்த விருது கிடைத்தது தமிழுக்கு கிடைத்த
பெருமை என மற்றொரு சாரரும் கூறி வருகின்றனர். வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் அறிவித்தது. சர்ச்சைகள் காரணமாக ஓஎன்வி விருதை திருப்பியளிக்க முடிவு செய்திருப்பதாக வைரமுத்து அறிவித்துள்ளார்.
must read: விருதை திருப்பியளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன் - வைரமுத்து..
இந்நிலையில், வைரமுத்துவின் மகனும் கவிஞருமான மதன் கார்க்கி தனது ட்விட்டர் பக்கத்தில், சிலர் உங்கள் தந்தையையும் தாயையும் வெறுத்து, அவர்கள் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும்போது, உங்கள் பெற்றோர் அதனை மறுக்கும்போது நீங்கள் யாரை நம்புவீர்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ”நான் எனது தந்தையை நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ள மதன் கார்க்கி, தங்கள் பக்கம் உண்மை உள்ளதாக குற்றம்சாட்டுபவர்கள் நம்பினால், அதை அவர்கள் சட்ட அதிகாரிகளிடம் எடுத்து செல்லட்டும் என்று தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.