சிபிராஜ் நடித்துள்ள மாயோன் திரைப்படத்தின் புரொமோஷனுக்காக ரதம் ஒன்று தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. படக்குழுவினரின் இந்த முயற்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுளள் படம் மாயோன். இந்த படத்தை டபுள் மீனிங் புரொடகசன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார்.
இந்த படத்திற்கு திரைக்கதையும் அவரே எழுதியுள்ளார். ததை கிஷோர் இயக்கியுள்ளார்.
புதையல் வேட்டை, சிலை கடத்தல் என சுவாரசியமும், பரபரப்பும் நிறைந்த த்ரில்லர் படமாக மாயோன் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
Also read... மெஹந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண கொண்டாட்டம்!
இந்நிலையில் படத்திற்காக புதுவித புரொமோஷனில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக ரதம் ஒன்று படத்தில் வருவது போன்று அமைக்கப்பட்டு அதில் விளம்பரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த ரதம் தொடர்ந்து 26 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் வலம் வரவுள்ளது.

மாயோன் ரதம் தமிழ்நாட்டில் வலம் வரும் விபரம்
இந்தப் படம் குறித்து நடிகரும், மூத்த இயக்குனருமான கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில், ‘இந்த படத்தில் பல ஆச்சரியங்கள் உள்ளன. ஷூட்டிங்கின்போது குகைபோன்ற இடத்திற்கு சென்றோம். உள்ளே ஒரு கோயிலை அமைத்துள்ளார்கள். இந்த படத்தின் கலை இயக்கம் பிரம்மிக்கும் வகையில் உள்ளது’ என்றார்.
இதையும் படிங்க - இந்த ஹிட் பாடல்களை எழுதியது விக்னேஷ் சிவனா? இளம் இயக்குனரின் இன்னொரு பக்கம்
நடிகர் சிபிராஜ் கூறுகையில், ‘டாவின்சி கோட், இன்டியானா ஜோன்ஸ் போன்று படம் பண்ண வேண்டும் என்று இருந்தேன். அதுவும், இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறியுள்ளது. சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இந்தப் படம் அமையும்.’ என்றார்.
மாயோன் ட்ரெய்லரைப் பார்க்க...
இயக்குனர் கிஷோர் பேசுகையில், ‘மாயோன் ஃப்ரெஷ்ஷான திரைக்கதை. நிறைய பொருட் செலவில் பிரமாண்டமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க எளிதாக புரிந்து உணரும் படமாக இந்தப் படம் அமையுன்றார். ’
மாயோன் திரைப்படம் இம்மாதம் 24ம்தேதி திரைக்கு வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.