முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாவீரன் படத்தின் புதிய அப்டேட் : சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று வெளியாகும் முதல் பாடல்!

மாவீரன் படத்தின் புதிய அப்டேட் : சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று வெளியாகும் முதல் பாடல்!

மாவீரன் சிவகார்த்திகேயன்

மாவீரன் சிவகார்த்திகேயன்

மண்டேலா திரைப்படத்திற்கு இசையமைத்த பரத் ஷங்கர் இந்த திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படத்தின் முதல் பாடல் அவருடைய பிறந்தநாள் அன்று வெளியாகிறது. 

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தில் இடம்பெறும் முதல் பாடலை அவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 17ஆம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். மண்டேலா திரைப்படத்திற்கு இசையமைத்த பரத் ஷங்கர் இந்த திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார். இதுவரை  சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படங்களுக்கு பிரபல இசையமைப்பாளர்களான அனிருத், டி.இமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களே இசையமைத்து வந்தனர்.

இந்த நிலையில் முதன்முறையாக வளரும் இசையமைப்பாளர் இசையில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இதனால் பாடல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. மாவீரன் திரைப்படம் மண்டேலா படம் போலவே அரசியல் சார்ந்த கருத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

மாவீரன் திரைப்படத்திற்கான அறிவிப்பிற்கு வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த வீடியோ ஆக்சன் பார்முலா திரைப்பட பாணியில் எடுக்கப்பட்டிருந்து. எனவே, அந்த திரைப்படம் ஆக்ஷன் பின்னணியில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் அது மண்டேலா வகையிலான திரைப்படம் என படக் குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது.

First published:

Tags: Movie, Single Track, Sivakarthikeyan