Home /News /entertainment /

Maaveeran: சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஷங்கர் மகள் அதிதி!

Maaveeran: சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஷங்கர் மகள் அதிதி!

சிவகார்த்திகேயன் - அதிதி

சிவகார்த்திகேயன் - அதிதி

Maaveeran sivakarthikeyan movie : மாவீரன் படத்தின் நாயகியாக அதிதி சங்கர் நடிப்பார் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருடன் ஜோடி சேர்கிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

    பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி நடிகையாக களம் இறங்கியுள்ளார். இவர் ஏற்கெனவே நடித்து முடித்துள்ள விருமன் படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். . முற்றிலும் கிராமத்து கதையான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்டோர் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இசை மற்றும் டிரைலர் வெளியீடு விழாவானது இன்று மாலை மதுரையில் நடைப்பெறவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



    இயக்குநர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

    .மகள் அதிதி அறிமுகம் ஆகும் விருமன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் பங்கேற்கிறார். படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா மற்றும் திரை பிரபலங்கள் விருமன் பட விழாவில் கலந்து கொள்கின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிதியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
    அதன் படி, மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தில் அதிதி நடிக்கிறார்.



    இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளது.  தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகியாக அதிதி சங்கர் நடிப்பார் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அதிதிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Director Shankar, Kollywood, Sivakarthikeyan, Tamil Cinema

    அடுத்த செய்தி