யார் இடத்துல வந்து யார் சீனப் போடறது... செஞ்சுருவேன் - மாஸான ’மாரி 2’ ட்ரெய்லர் - வீடியோ

தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஆட்டோ ஓட்டும் பெண்ணாக வரும் சாய் பல்லவி அராத்து ஆனந்தி என்ற கதாபாத்திரல் நடித்து அசத்தியிருக்கிறார்.

news18
Updated: December 5, 2018, 12:23 PM IST
யார் இடத்துல வந்து யார் சீனப் போடறது... செஞ்சுருவேன் - மாஸான ’மாரி 2’ ட்ரெய்லர் - வீடியோ
மாரி 2 - தனுஷ்
news18
Updated: December 5, 2018, 12:23 PM IST
‘மாரி 2’ படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகமாக ‘மாரி 2’ உருவாகியுள்ளது. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஆட்டோ ஓட்டும் பெண்ணாக வரும் சாய் பல்லவி, அராத்து ஆனந்தி என்ற கதாபாத்திரல் நடித்து அசத்தியிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

டிசம்பர் 21-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சமீபத்தில் ‘ரவுடி பேபி’ என்ற முதல்பாடலை வெளியிட்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘நான் கெட்டவனுக்கே கெட்டவன்’ உள்ளிட்ட வசனங்களை பேசியிருக்கும் தனுஷ் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ள ‘செஞ்சுருவேன்’ என்ற வசனத்தையும் விட்டுவைக்கவில்லை.இந்த ட்ரெய்லரை தனுஷ் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Must Watch:

இயக்குனர் சங்கர் படங்களை வெற்றியடைய செய்த காட்சிகள் - வீடியோ
Loading...
First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...