’மாரி 2’ ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ் - ரசிகர்கள் உற்சாகம்

'மாரி 2' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்

news18
Updated: December 4, 2018, 7:15 PM IST
’மாரி 2’ ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ் - ரசிகர்கள் உற்சாகம்
மாரி 2: தன்ஷ் - சாய் பல்லவி
news18
Updated: December 4, 2018, 7:15 PM IST
'மாரி 2' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மாரி 2’ படம் உருவாகியுள்ளது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. அதற்காக படத்தின் விளம்பரப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். அதன்படி, படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களின் பெயர்களை வெளியிட்ட படக்குழு, சமீபத்தில் படத்தின் முதல் பாடலையும் வெளியிட்டது. யுவன் சங்கர்ராஜா இசையில் தனுஷ் எழுதி அவரே பாடியிருந்த ’ரவுடி பேபி’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.


Loading...


இந்த நிலையில் படம் டிசம்பர் 21-ம் தேதி ரிலீசாகும் என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார். மேலும் படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை வீடியோவை வெளியிட்ட திருநங்கை நஸ்ரியா - வீடியோ

First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...