விஜய்சேதுபதியின் மலையாள பட டீசர் வீடியோ!

ஜூலை மாதம் 11-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது.

news18
Updated: June 16, 2019, 12:54 PM IST
விஜய்சேதுபதியின் மலையாள பட டீசர் வீடியோ!
மார்க்கோனி மத்தாய் படத்தில் விஜய்சேதுபதி
news18
Updated: June 16, 2019, 12:54 PM IST
மலையாளத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள மார்க்கோனி மத்தாய் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ்ப்படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, மார்க்கோனி மத்தாய் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயராம் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கும் நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

சனில் கலத்தில் இயக்கும் இந்தப் படத்தில் வங்கி காவலாளியாக நடிகர் ஜெயராம் நடித்துள்ளார். வங்கி காவலாளி ஒருவருக்கும் அங்கு துப்புரவு பணிப்பெண்ணாக வேலைபார்க்கும் பெண்ணுக்கும் ஏற்படும் காதலும், நடிகர் விஜய்சேதுபதியால் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமும் தான் படத்தின் கதைக்களம்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த 10-ம் தேதியன்று நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட நிலையில், தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜூலை மாதம் 11-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது.

First published: June 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...