Home /News /entertainment /

சிம்புவின் பத்து தல படத்தில் இணையும் மாநாடு எடிட்டர் ப்ரவீன்...

சிம்புவின் பத்து தல படத்தில் இணையும் மாநாடு எடிட்டர் ப்ரவீன்...

சிம்பு

சிம்பு

மாநாடு படத்தின் சிக்கலான திரைக்கதையை, மக்களுக்கு எளிமையாக புரியவைத்ததில், இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு அடுத்தபடியாக எடிட்டர் கே.எல். பிரவீன் இருந்தார்.

    மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னர் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்சன் பணிகள் தொடங்கவுள்ளன.

    வெந்து தணிந்தது காடு படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்துடன் ஏ.ஆர்.ரகுமான், கவுதம் மேனன், சிம்பு கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது.

    சமீபத்தில் இந்த படம் தொடர்பாக பேட்டி அளித்திருந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், 5 கேரக்டரில் சிம்பு நடித்துள்ளதாக கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். மேலும் சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தைப் போன்று பல்வேறு கால காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த படத்தை முடித்துக் கொண்டு பத்து தல படத்தில் சிம்பு இணையவுள்ளார். இந்த படத்திற்கும் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    பத்து தல படத்தை தமிழில சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை, ஹிப்பி ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக்கும் இடம்பெற்றுள்ளார். ஸ்டூடியோ க்ரீன் சார்பாக கே.இ. ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

    இந்நிலையில் மாநாடு படத்தில் எடிட்டராக பணியாற்றிய கே.எல். பிரவீன் பத்து தல படத்தில் பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



    மாநாடு படத்தின் சிக்கலான திரைக்கதையை, மக்களுக்கு எளிமையாக புரியவைத்ததில், இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு அடுத்தபடியாக எடிட்டர் கே.எல். பிரவீன் இருந்தார். எடிட்டிங்கில் சிறிது சொதப்பினாலும், மாநாடு படத்தை நன்றாக ரசித்திருக்க முடியாது என்பதுதான் எதார்த்தம். இந்நிலையில் மாநாடு எடிட்டர் பத்து தல படத்திலும் பணியாற்றுவது சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Simbu

    அடுத்த செய்தி