Home /News /entertainment /

மாநாடு ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்தது சோனிலிவ்..

மாநாடு ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்தது சோனிலிவ்..

மாநாடு

மாநாடு

வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை சோனிலிவ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் போது திரையரங்குகள் மாதக்கணக்கில் மூடப்பட்டது ஓடிடி நிறுவனங்கள் இந்தியாவில் ஆழமாக வேரூன்ற ஏதுவானது. ஓடிடி உரிமை திரைப்படங்களின் முக்கிய வருவாயாக மாறியுள்ளது. நேரடியாக ஓடிடியில் வெளியாக ஒரு கட்டணம், திரையரங்கில் வெளியான பின் ஓடிடியில் வெளியிட ஒரு கட்டணம். அதிலும் எவ்வளவு விரைவாக வெளியாகிறதோ அதற்கேற்ப அதிக கட்டணம் என பல்வேறு கட்டணங்களை நிர்ணயித்து படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்குகின்றன. இங்கேயும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கே முன்னுரிமை. அறிமுகங்களின் படங்கள் அனாதையாகவே நடத்தப்படுகின்றன.

also read :நடிகை சதாவின் ’Wild Life Journey’ - வைரல் புகைப்படங்கள்

மாநாடு படம் வெளியான போது ஏற்பட்ட பணப்பிரச்சனையின் போது சோனிலிவ் நிறுவனம் 11 கோடிகளுக்கு மாநாடு படத்தை விலைபேசியதாக கூறப்பட்டது. படம் மூன்று வாரங்களை கடந்து நான்காவது வாரத்தை எட்டிய நிலையில் டிசம்பர் 24 ஆம் தேதி படம் சோனிலிவ் ஓடிடியில் வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது படம் திரையரங்கில் வெளியாகி ஐந்தாவது வாரத்தில்தான் ஓடிடிக்கு வருகிறது.
மோகன்லாலின் மரைக்கார் திரைப்படம் இரண்டு வாரங்கள் முடிந்ததுமே ஓடிடிக்கு வந்தது.

சூர்யவன்ஷி திரைப்படம் மூன்றாவது வாரத்தில் ஓடிடியில் வெளியானது. அதனுடன் ஒப்பிடுகையில் மாநாடு ரொம்ப நாள் தள்ளியே ஓடிடிக்கு வருகிறது.ஓடிடியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி சப் டைட்டிலுடன் படம் வெளியாவதால் அதிக ரசிகர்களை படம் சென்றடைய வாய்ப்புள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Simbu

அடுத்த செய்தி