• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Maanaadu Review: தடைகளை தகர்த்த சிம்புவின் மாநாடு எப்படி இருக்கிறது?

Maanaadu Review: தடைகளை தகர்த்த சிம்புவின் மாநாடு எப்படி இருக்கிறது?

சிம்பு

சிம்பு

Maanaadu Review Rating: தமிழ் சினிமாவின் புதுமையான இந்த முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

  • Share this:
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம், பெரும் போராட்டங்களுக்குப் பிறகு இன்று திரைக்கு வந்துள்ளது.அதிகாலையில் ரசிகர்களுக்கு திட்டமிடப்பட்ட சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது, பெரும் ஏமாற்றத்தை அளித்தாலும் அதன் பின்னர் வெளியான திரைப்படத்தை, ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கண்டுகளித்தனர்.

மாநிலத்தின் முதலமைச்சரை கொலை செய்ய நடைபெறும் ஒரு சதித்திட்டத்தில் சிம்பு மாட்டிக்கொள்ள பின்னர் டைம் லூப் எனப்படும் நடந்த சம்பவங்களே திரும்பத் திரும்ப நடைபெறும் வலை பின்னல் காட்சிகளை நகைச்சுவையாகவும் பரபரப்பாகவும் சொல்ல வெங்கட் பிரபு முயற்சி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் புதுமையான இந்த முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் முதல் பாதி சற்று வழக்கமாக இருந்தாலும், படத்தின் இரண்டாவது பாதியில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பின் காரணமாக படத்தின் வேகம் சூடு பிடிக்கத் துவங்குகிறது. சிம்புவிற்கு நிகரான முக்கியத்துவம் எஸ் ஜே சூர்யா-விற்கு வழங்கப்பட்டுள்ளது படத்தின் சுவாரஸ்யத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை, ரசிகர்களுக்கு மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு நல்ல விருந்தாக அமைந்துள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் மூலம் கிங் ஆப் பிஜிஎம் என்பதை மீண்டும் ஒருமுறை யுவன் நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

டைம் லூப் தமிழ் சினிமாவிற்கு புதிய கதைக்களம் என்பதால் அதனை விளக்கும்படி, கதாபாத்திரங்கள் மீண்டும் மீண்டும் அதைப் பற்றி பேசுவது லேசான அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு உடல் வருத்தி ஒரு திரைப்படத்திற்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்து நடித்து முடித்துள்ளது, மீண்டும் அவருக்கு தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வர மறு வாய்ப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

வித்தியாசமான இந்த முயற்சியை ரசிகர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டாடும் பட்சத்தில் சிம்புவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக மாநாடு திரைப்படம் கொண்டாடப்படும்



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: