முஸ்லிமாக அவதாரமெடுக்கும் நடிகர் சிம்பு!

முஸ்லிமாக அவதாரமெடுக்கும் நடிகர் சிம்பு!
சிம்பு
  • Share this:
மாநாடு படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் குறித்த தகவலை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டில் சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் உருவாகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 2019-ம் ஆண்டின் கோடைவிடுமுறைக்கு படம் திரைக்கு வரும் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு கூட தொடங்கவில்லை.

பின்னர் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று மீண்டும் அறிவிப்பு வெளியானது. ஆனால் காலமும் நேரமும் கடந்து கொண்டே போவதால், மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.


மாநாடு படம் கைவிடப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடிக்கவும் சிம்பு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் ரூ.125 கோடி செலவில் 5 மொழிகளில் படமாக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதில் திடீர் திருப்பமாக கடந்த ஆண்டு இறுதியில் நடிகர் சிம்பு, மாநாடு படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு சரியாக வந்து ஒத்துழைப்பு அளிப்பதாக உத்தரவாதம் கொடுத்ததாலும் மாநாடு படம் மீண்டும் தொடங்கப்பட்டது.

பிரேம்ஜி, சிம்புவுடன் வெங்கட் பிரபு
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பொங்கல் விழாவை முன்னிட்டு இந்தப் படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ தகவல்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். யுவன் சங்கர்ராஜா இசையமைக்க பிரவீன் கே.எல் இந்தப் படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

படத்தில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பெயரை அடுத்தடுத்து வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் ஒரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக வெங்கட் பிரபு பேசும் வீடியோ ஒன்றையும் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்.அதில் பேசியிருக்கும் வெங்கட் பிரபு, முதல்முறையாக இந்தப் படத்தில் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாகவும், அவரது பெயரை ரசிகர்கள் தேர்வு செய்யலாம் என்றும் கூறியுள்ளார். ரசிகர்களால் அனுப்பப்படும் பெயர்களில் தேர்வாகும் ஒரு பெயர் சிம்புவின் பிறந்தநாளன்று அறிவிக்கப்படும் என்றும் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

மேலும் படிக்க: மகாலட்சுமி - ஈஸ்வர் பிரச்னையால் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்