• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Maanaadu: யுவனின் அடுத்த குடும்பப் பாடல் - ‘மாநாடு’ ஃபர்ஸ்ட் சிங்கிள் டீசர் வெளியீடு!

Maanaadu: யுவனின் அடுத்த குடும்பப் பாடல் - ‘மாநாடு’ ஃபர்ஸ்ட் சிங்கிள் டீசர் வெளியீடு!

மாநாடு

மாநாடு

மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என யுவன் அறிவித்திருந்தார்.

  • Share this:
    மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்பு தற்போது பூர்த்தியாகியிருக்கிறது.



    இந்நிலையில் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என யுவன் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ’மேர்ஸைலா’ எனத் தொடங்கும் அந்தப் பாடல் ஜூன் 21-ம் தேதி மதியம் 12.06 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ள விஷயத்தையும், டீசரில் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: