Home /News /entertainment /

ஷங்கரை தொடர்ந்து தெலுங்கில் படம் இயக்கும் வெங்கட்பிரபு

ஷங்கரை தொடர்ந்து தெலுங்கில் படம் இயக்கும் வெங்கட்பிரபு

வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு

இதில் நடிக்க இருப்பவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் தனது அடுத்தப் படம் தெலுங்கு என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.  

தமிழின் முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். தமிழில் பிரமாண்ட படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த ஷங்கர் தற்போது ராம்சரண் நடிப்பில் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார்

அதேபோல லிங்குசாமி ராம் பொத்னேனி நடிப்பில் வாரியர் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார். இவர்களை தொடர்ந்து வெங்கட்பிரபுவும் தெலுங்குப் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை இந்தியில் விரைவில் ரீமேக் செய்யவுள்ளனர்.

இதையும் படிங்க.. Bro Daddy review : சந்தோஷமா வாங்க, சிரிச்சிட்டே போங்க.. ப்ரோ டாடி விமர்சனம்!

இந்த ரீமேக்கையும் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். இந்த வருட இறுதியில் மாநாடு இந்தி ரீமேக்குக்கான வேலைகள் தொடங்கப்பட உள்ளன. தற்போது மன்மதலீலை திரைப்படத்தை அசோக் செல்வன் நடிப்பில் வெங்கட்பிரபு எடுத்து வருகிறார் இது ஹாலிவுட் அமெரிக்கன் பை போன்ற அடல்ட் காமெடியை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்தப் படம் முடிந்ததும் நேரடி தெலுங்கு படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார்.

இதையும் படிங்க.. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 10வது பாகத்தில் இணையும் அக்வாமேன்!

இதில் நடிக்க இருப்பவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் தனது அடுத்தப் படம் தெலுங்கு என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.  தமிழ்ப்பட இயக்குனர்கள் மட்டுமின்றி தமிழின் முன்னணி நடிகர்களும் தெலுங்கு இயக்குனர்கள் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். விஜய் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். அதேபோல் சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தை வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இவர்கள் மூவருமே தெலுங்குப்பட இயக்குனர்கள். இவர்களைத் தொடர்ந்து மேலும் சில முன்னணி நட்சத்திரங்கள் தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க இருக்கிறார்கள். அதேபோல் இயக்குனர்களும் தெலுங்கில் படம் இயக்க ஆவலாக உள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Kollywood, Venkat Prabhu

அடுத்த செய்தி