ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முதல்நாள் வசூலில் நான்காவது இடம் பிடித்த மாநாடு...! முதல் மூன்று இடங்கள் எந்தப் படங்கள்

முதல்நாள் வசூலில் நான்காவது இடம் பிடித்த மாநாடு...! முதல் மூன்று இடங்கள் எந்தப் படங்கள்

மாநாடு

மாநாடு

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 வெளியான அண்ணாத்த இதில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2021 பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் மாஸ்டர் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் தனுஷின் கர்ணன். நான்காவது இடத்தை மாநாடு பிடித்துள்ளதாக ஒருமித்த குரலில் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :

2021 இல் வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் நான்காவது இடத்தை மாநாடு பிடித்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் சிம்பு படங்கள் இடம் பெறுவதில்லை.  ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, விக்ரம் என்று வரும் படிநிலையில் சிம்புவின் இடம் ரொம்பவும் கீழே இருந்தது. மாநாடு அதனை மாற்றியுள்ளது. 2021 இல் வெளியான படங்களில் முதல்நாள் தமிழக வசூலில் நான்காவது இடத்தை மாநாடு பெற்றுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 வெளியான அண்ணாத்த இதில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2021 பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் மாஸ்டர் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் தனுஷின் கர்ணன். நான்காவது இடத்தை மாநாடு பிடித்துள்ளதாக ஒருமித்த குரலில் விமர்சகர்கள் கூறுகிறார்கள். எனில், முதல் நாளில் சிவகார்த்திகேயனின் டாக்டர் அடித்துக் கிளப்பியதாகச் சொன்னது பொய்யா? ஏன் என்றால், இவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் கார்த்தியின் சுல்தான் உள்ளது. ஆறாவது இடம்தான் டாக்டருக்கு.

Also read... சிகாகோ சர்வதேச திரைப்பட விழாவில் டொவினோ தாமஸின் களை திரைப்படம்!

மாநாடு திரைப்படம் தமிழகத்தில் முதல்நாளில் சுமார் 6.8 கோடிகள் வசூலித்ததாக கூறப்படுகிறது. இரண்டாவது நாளான இன்று வசூல் மேலும் அதிகரிக்கும். அதில் சந்தேகமேயில்லை. இந்த வார இறுதிக்குள் படம் மிகப்பெரிய வசூலை எட்டும். சிம்பு படங்களில் இதுவே அதிகபட்சமாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

First published:

Tags: Actor Simbhu, Maanaadu