Home /News /entertainment /

இந்திய-பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற ’மாமனிதன்’ விஜய் சேதுபதி!

இந்திய-பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற ’மாமனிதன்’ விஜய் சேதுபதி!

மாமனிதன்

மாமனிதன்

மாமனிதன் படம் வெளியான உடனேயே பல்வேறு தரப்பிலிருந்து பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்திய-பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

    இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தமிழ் பொழுதுபோக்குப் படமான 'மாமனிதன்' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது அவர் இந்திய-பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். அதோடு இவ்விழாவில் மாமனிதன் படம் சிறந்த படத்துக்கான விருதையும் வென்றுள்ளது.

    இது குறித்து ட்விட்டரில் குறிப்பிட்ட இயக்குனர் சீனு ராமசாமி, "சிறந்த நடிகருக்கான விருதை வென்ற விஜய் சேதுபதிக்கும், சிறந்த படத்தை தயாரித்த யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் வாழ்த்துகள். இந்தோ-பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவிற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    கவர்ச்சி படங்களால் இணையத்தை தெறிக்கவிட்ட பிந்து மாதவி!

    தவிர, மாமனிதன் படம் வெளியான உடனேயே பல்வேறு தரப்பிலிருந்து பெரும் பாராட்டுகளைப் பெற்றது. பிரபல இயக்குனர் ஷங்கர் இதை 'யதார்த்தமான கிளாசிக்' என்று குறிப்பிட்டார். இப்படத்தில் விஜய் சேதுபதியின் சிறப்பான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது என்றும் ஷங்கர் கூறியிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையே இந்த ஆண்டு டோக்கியோ திரைப்பட விருதுகளில் மாமனிதன் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay Sethupathi

    அடுத்த செய்தி