ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘மாமனிதன்’ ரிலீஸ்... எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைஞர் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய இயக்குனர் சீனுராமசாமி !

‘மாமனிதன்’ ரிலீஸ்... எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைஞர் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய இயக்குனர் சீனுராமசாமி !

இயக்குனர் சீனு ராமசாமி

இயக்குனர் சீனு ராமசாமி

சீனு ராமசாமி எழுதி இயக்கும் மாமனிதன் திரைப்படம் வரும் ஜூன் 24 திரைக்கு வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் இயக்குனர் சீனுராமசாமி எம்.ஜி.ஆர் - சிவாஜி - கலைஞர் கருணாநிதி சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

  நடிகர் விஜய் சேதுபதி, காயத்திரி,குரு சோமசுந்தரம் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் முதன் முறையாக இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இசையில் சீனு ராமசாமி எழுதி இயக்கும் மாமனிதன் திரைப்படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது.இப்படத்தை நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டூடியோ நைன் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.

  கலைஞர் கருணாநிதி சிலைக்கு முன்பு சீனு ராமசாமி

  இதையும் படிங்க.. சின்ன அண்ணாமலையும், சிவாஜி கணேசனும் - ஓர் அரிய காம்பினேஷன்

  எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய சீனு ராமசாமி

  இந்த தருணத்தில் தமிழக திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் நினைக்கப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் சிலைக்கு இயக்குனர் சீனுராமசாமி மலர் மரியாதை செய்தார்.இதுக் குறித்து பேசிய அவர், "இந்த தமிழ்ச்சினிமாவின் மாமனிதர்கள் எனக்குள் உண்டாக்கிய கலை உணர்வுக்கு நன்றி கூறும் விதமாக என் அன்பை மலர்களாக சமர்ப்பித்தேன்" என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Actor Sivaji ganesan, Actor Vijay Sethupathi, Kollywood, MGR, Seenu ramasamy, Tamil Cinema