வாளேந்தியும் வென்றிருக்கிறார் மாரி செல்வராஜ் - தி.மு.க எம்.எல்.ஏ மா. சுப்பிரமணி பாராட்டு

கர்ணன்

ஒரு சமூகம் அநீதி கண்டு ஒரு தலைவனின் பின்னால் கிளர்ந்தெழும் கதையை யதார்த்தம் மீறாமல் உணர்ச்சிகரமான கலை படைப்பாக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

 • Share this:
  மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி என்ற பேச்சு எழுந்ததுமே படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் வெளியானதும் அந்த படத்தின் மீது எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு எழுந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் கர்ணன் படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. தனுஷ் மற்றும் லால் ஆகியோரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

  சாதியால் அடக்கப்பட்ட ஒரு சமூகம் அநீதி கண்டு ஒரு தலைவனின் பின்னால் கிளர்ந்தெழும் கதையை யதார்த்தம் மீறாமல் உணர்ச்சிகரமான கலை படைப்பாக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். திரைப்பிரலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரும் கர்ணனை பாராட்டி வருகின்றனர். முன்னாள் மேயரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான மா, சுப்பிரமணியன் ’கர்ணன்’ படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

     "பரியேறும் பெருமாளில் "பாமர மக்களின் விடுதலை உணர்ச்சியைப் படைத்தவர்' கரியேறும் கர்ணனில் " இன்னும் அதை கம்பீரமாய் வடித்திருக்கிறார். தடுக்கப்பட்டவரின் உரிமைகளுக்கு தாளேந்திய மாரி செல்வராஜ் வாளேந்தியும் வென்றிருக்கிறார் வாழ்த்துகள். எனப் பதிவிட்டுள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: