அஜித்தை பாராட்டி ‘தளபதி 63’ அப்டேட் குறித்து வாய் திறந்த பிரபலம்!

அஜித்தை பாராட்டி ‘தளபதி 63’ அப்டேட் குறித்து வாய் திறந்த பிரபலம்!
தளபதி 63| நேர்கொண்ட பார்வை
  • News18
  • Last Updated: June 12, 2019, 7:59 PM IST
  • Share this:
‘தளபதி 63’ படம் குறித்த அப்டேட் வரும் போது நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள் என்று ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்-ன் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இந்தப் படத்தில் விஜய்யுடன் 12-வது முறையாக நடிகர் விவேக் இணைந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படம் தொடங்கும் போதே தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தமாதம் 22-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் படம் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் படம் குறித்த அப்டேட் கேட்ட ரசிகருக்கு பதிலளித்த பாடலாசிரியர் விவேக், “தலைவா.. என்னை நம்புங்க. படம் குறித்த அப்டேட் வரும் போது நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். இப்போது இதைமட்டும் தான் சொல்ல முடியும்” என்று கூறியுள்ளார்.


விவேக்கின் இந்த பதில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

முன்னதாக, நேர்கொண்ட பார்வை பட ட்ரெய்லரில் அஜித் பேசும் வசனத்தை குறிப்பிட்டு ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் பாடலாசிரியர் விவேக், அந்த வசனத்துக்கு அஜித் சார்தான் சரியான உதாரணம் என்று கூறி வாழ்த்து தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.வீடியோ பார்க்க: என்னுடைய பாசையில் நடிகர் சங்கத்தேர்தல் ஆட்டுப் புழுக்கை தேர்தல் - ராதாரவி

First published: June 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்