'வெறித்தனம்' சீக்ரெட் சொல்லும் விவேக்!

மெர்சல் படத்தில் விஜய் பாடாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த ஏமாற்றத்தை பிகில் படக்குழுவினர் இந்த படத்தில் பூர்த்தி செய்துள்ளார்.

Web Desk | news18
Updated: July 8, 2019, 8:07 PM IST
'வெறித்தனம்' சீக்ரெட் சொல்லும் விவேக்!
பிகில் படக்குழு
Web Desk | news18
Updated: July 8, 2019, 8:07 PM IST
வெறித்தனம் பாடல் குறித்து பாடலாசிரியர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதுவரை படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாகியிருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி படத்தின் முதல்பாடலான வெறித்தனம் என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழுவின் இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில் இந்த அறிவிப்பை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர். அந்த வகையில் இந்திய அளவில் முதலாவதாக #வெறித்தனம் ஹேஷ்டேக்கும், இரண்டாவது இடத்தில் #பிகில் ஹேஷ்டேக்கும், மூன்றாவது இடத்தில் #தளபதி என்ற ஹேஷ்டேக்கும் உள்ளது.வெறித்தனம் பாடல் தொடர்பாக படக்குழு வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் விஜய் கைகட்டி நிற்க அவர் அருகே அமர்ந்துள்ளார் பாடலாசிரியர் விவேக் இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், “என்ன அண்ணனே நின்றிருக்கிறார் நீங்க உட்கார்ந்து இருக்கீங்க” என்று பாடலாசிரியர் விவேக்கிடம் நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்துள்ள பாடலாசிரியர் விவேக், “நான் விஜய் சாரை உட்கார சொன்னேன். ஆனால் அவர் தனது எளிமையால் அதை மறுத்துவிட்டார். ஏனெனில் நான் உயரம் அதிகம்; கேமிரா கோணங்கள் மாற்ற வேண்டியிருக்கும் என்பதால் தான்.

ஏ.ஆர்.ரஹ்மான் அவரது இருக்கையில் அமர்ந்திருக்க, விஜய் அவரது தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இது என்னுடைய கனவுநாள்” என்று கூறியுள்ளார்.

மெர்சல் படத்தில் விஜய் பாடாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த ஏமாற்றத்தை பிகில் படக்குழுவினர் இந்த படத்தில் பூர்த்தி செய்துள்ளார்.

வீடியோ பார்க்க: தளபதி விஜய்யின் பலருக்கும் தெரியாத 50 சுவாரஸ்ய விசயங்கள்!

First published: July 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...