முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தளபதியின் முத்தம் - ''அண்ணன் மாதிரி நீங்க..'' - பாடலாசிரியர் விவேக் உருக்கம்!

தளபதியின் முத்தம் - ''அண்ணன் மாதிரி நீங்க..'' - பாடலாசிரியர் விவேக் உருக்கம்!

பாடலாசிரியர் விவேக்குடன் நடிகர் விஜய்

பாடலாசிரியர் விவேக்குடன் நடிகர் விஜய்

மெர்சல், சர்கார், பிகில், வாரிசு உள்ளிட்ட விஜய் படங்களில் முழு பாடல்களையும் விவேக் எழுதியிருக்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மெர்சல் படத்திலிருந்து தொடர்ச்சியாக நடிகர் விஜய்யின் படங்களுக்கு பாடல் எழுதிவருகிறார் பாடலாசிரியர் விவேக். இவர் எழுதிய ஆளப்போறான் தமிழன், சிங்கப்பெண்ணே போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

சமீபத்தில் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நடிகர் விஜய்யின் வாரிசு படத்துக்கு பாடல்கள் எழுதியதோடு அல்லாமல், கூடுதல் திரைக்கதை மற்றும் வசனமும் எழுதியிருந்தார். ஆட்டநாயகன் போன்ற வசனங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது.

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசும்போது, பாடலாசிரியர் விவேக்கிற்குள் ஒரு இயக்குநர் இருப்பதாகவும் விரைவில் அவரை இயக்குநராக பார்க்கலாம் எனவும் தெரிவித்திருந்ததார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் தனக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை வெளியிட்ட பாடலாசிரியர் விஜய், ''சில உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இந்த நம்ப முடியாத பயணத்தில் நீங்கள் என்னிடம் மூத்த சகோதரரைப் போல அன்பும் ஆதரவும் அளித்திருந்தீர்கள். என் கலைப் பயணத்தில் இந்த அழகான தருணத்தை எதனாலும் வெல்ல முடியாது. லவ்யூ தளபதி'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்துவருகிறார்கள்.

மெர்சல், சர்கார், பிகில், வாரிசு உள்ளிட்ட விஜய் படங்களில் முழு பாடல்களையும் விவேக் எழுதியிருக்கிறார். தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிம்புவின் பத்து தல படத்தில் பாடலாசிரியர் விவேக் எழுதிய நம்ம சத்தம் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

First published:

Tags: Actor Thalapathy Vijay