Lyricist Vivek: ’ஒரே நாளில் 2 நண்பர்களை இழந்து விட்டேன்’ பாடலாசிரியர் விவேக் உருக்கம்

விவேக்

“ஒரே நாளில் எனக்கு மிகவும் நெருக்கமான 2 நண்பர்களை நான் இழந்துள்ளேன். இது உங்கள் அனைவரையும் பயப்பட வைக்கும் பதிவு அல்ல.”

  • Share this:
    ஒரே நாளில் தனது 2 நண்பர்களை கொரோனாவால் இழந்திருப்பதாக பாடலாசிரியர் விவேக் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    கொரோனா 2-ம் அலை இந்தியாவில் படு வேகமாக பரவி வருகிறது. அதோடு பல உயிர்களையும் பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்திருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் நாள்தோறும் வரும் இறப்பு செய்திகள் நம்மை ஒருவித அழுத்தத்திற்குள்ளாக்குகின்றன.

    அந்த வகையில் தற்போது பாடலாசிரியர் விவேக் தனது 2 நண்பர்களை ஒரே நாளில் இழந்திருக்கிறார். எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் விவேக். விஜய் நடித்த மெர்சல் படத்தில் இவர் எழுதிய, ஆளப்போறான் தமிழன் பாடல் மூலம் பிரபலமானார். அதோடு பிகில் படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே பாடலையும் எழுதினார்.



    இந்நிலையில் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரே நாளில் எனக்கு மிகவும் நெருக்கமான 2 நண்பர்களை நான் இழந்துள்ளேன். இது உங்கள் அனைவரையும் பயப்பட வைக்கும் பதிவு அல்ல. இந்த கடினமான கால கட்டத்தை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற அக்கறையில் செய்த பதிவு” என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து கொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு தனது நண்பர்களை பலி கொடுத்த விவேக்கிற்கு ரசிகர்கள் தங்கள் ஆறுதலை கூறி வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: