சிங்கப்பெண்ணே பாடல் குறித்து ரசிகர்களுடன் பேசிய பாடலாசிரியர் விவேக்!

முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய் ‘பிகில்’ படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார்

Web Desk | news18
Updated: July 23, 2019, 10:34 AM IST
சிங்கப்பெண்ணே பாடல் குறித்து ரசிகர்களுடன் பேசிய பாடலாசிரியர் விவேக்!
பிகில்
Web Desk | news18
Updated: July 23, 2019, 10:34 AM IST
பிகில் படத்தில் இருந்து  ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இன்று வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களுடன் பாடல் குறித்து பேசியுள்ளார் பாடலாசிரியர் விவேக் .

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய் ‘பிகில்’ படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார்.

பிகில் படத்தில் இருந்து முதல் பாடல் ‘சிங்கப்பெண்ணே’ இன்று வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே சில நொடிகள் பாடல் லீக் ஆகி படக்குழுவுக்கு அதிர்ச்சி அளித்திருந்தந்து. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக இன்று பாடலை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் முழு பாடலையும் கேட்க ஆவலாக காத்திருக்கின்றனர்.


பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் எழுதியவர் பாடலாசிரியர் விவேக். இவர் ஏற்கனவே விஜய்யின் மெர்சல், சர்கார் அகிய படங்களுகு பாடல் வரிகளை எழுதியுள்ளார். இதையடுத்து அவர் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்தார். அவ்வப்போது ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இன்று சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகவுள்ள நிலையில் பாடலாசிரியர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘லீக்கான பாடலை கேட்காதவங்க கூட மட்டும் இப்ப பேசுவேன் என்று ஒரு பதிவிட்டிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருடன் படம் குறித்தும் பாடல் குறித்தும் கலகலப்பாக பேசி வருகின்றனர்.Also watch

First published: July 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...