‘தல 60’ படத்துக்கு பாடல் எழுதுகிறீர்களா? - பாடலாசிரியர் விவேக் பதில்

‘தல 60’ படத்துக்கு பாடல் எழுதுகிறீர்களா? - பாடலாசிரியர் விவேக் பதில்
  • News18
  • Last Updated: October 8, 2019, 5:00 PM IST
  • Share this:
‘தல 60’ படத்துக்கு பாடல் எழுதுகிறீர்களா என்ற கேள்விக்கு பாடலாசிரியர் விவேக் பதிலளித்துள்ளார்.

எனக்குள் ஒருவன் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான விவேக், மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை எழுதி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பிடித்துள்ளார். அதைத்தொடர்ந்து சர்கார், தற்போது பிகில் என விஜய்யின் ஃபேவரைட் பாடலாசிரியர் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் விவேக்கிடம் விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஷாரூக் கான் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒருவார்த்தையில் பதிலளித்திருந்ததை பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


உடனே ரசிகர் ஒருவர், அஜித்தின் 60-வது படத்தில் நீங்கள் பாடல் எழுதுகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விவேக், இல்லை. அது வெறும் ட்வீட் தான் என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: தமிழ் சினிமாவில் சாதி அரசியல்... அசுரன் படம் பற்றி வெற்றிமாறன் பேட்டி

First published: October 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading