சுய விளம்பரமா...? ஒருமையில் கேள்வி எழுப்பிய ரசிகருக்கு பாடலாசிரியர் விவேக் பதில்

சுய விளம்பரமா...? ஒருமையில் கேள்வி எழுப்பிய ரசிகருக்கு பாடலாசிரியர் விவேக் பதில்
பாடலாசிரியர் விவேக்
  • News18
  • Last Updated: September 22, 2019, 12:21 PM IST
  • Share this:
ஒருமையில் கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவருக்கு பாடலாசிரியர் விவேக் பதிலளித்துள்ளார்.

மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் மூலம் விஜய் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் பாடலாசிரியர் விவேக். தொடர்ந்து சர்கார் படத்தில் சிம்டாங்காரன் பாடலை எழுதிய இவர் தற்போது பிகில் படத்திலும் வெறித்தனம், சிங்கப்பெண்ணே ஆகிய பாடல்களை எழுதியுள்ளார்.

விஜய்க்கு ஹிட் பாடல்களை கொடுப்பதால் இவரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் விவேக், ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து வருகிறார்.


இந்நிலையில் பிகில் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பாடலாசிரியர் விவேக்கை பாராட்டிய படக்குழு, எம்.ஜி.ஆர்-க்கு கவிஞர் வாலி ஹிட் பாடல்களைக் கொடுத்தது போல, ரஜினிக்கு வைரமுத்து ஹிட் பாடல்களைக் கொடுத்தார். அந்த வரிசையில் விஜய்க்கு விவேக் ஹிட் பாடல்களைக் கொடுப்பதாக வரிசைப்படுத்தியது.

இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவர் பாடலாசிரியர் விவேக்கை குறிப்பிட்டு இது சுயவிளம்பரமாக இல்லையா ? என்று ஒருமையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விவேக், “இன்னும் 20 வருடம் நல்லா எழுதிக்கிட்டே இருந்தாலும், அவங்கள மாதிரி என்னால ஆக முடியாதுனு தான் மேடையில் சொன்னேன். இது சுய விளம்பரமா சகோ. போட்டோ மட்டும் பாத்துட்டு கமெண்ட் பண்றீங்க.

அப்புறம் நீங்க கேட்டதையே மரியாதையாவும் கேட்கலாம் சகோ” என்று கூறியுள்ளார்.


வீடியோ பார்க்க: சக்தே இந்தியாவின் காப்பியா பிகில்?

First published: September 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading