ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'மலையாளம் கலந்த தமிழில்.. பரவசமானேன்' - நடிகை சம்யுக்தாவை நெகிழ்ந்த வைரமுத்து!

'மலையாளம் கலந்த தமிழில்.. பரவசமானேன்' - நடிகை சம்யுக்தாவை நெகிழ்ந்த வைரமுத்து!

வைரமுத்து

வைரமுத்து

தமிழ்த் திரையுலகை கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தமிழால் ஆக்கிரமித்து வைத்திருப்பவர் வைரமுத்து.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தன்னுடைய பாடல் வரிகளை சிலாகித்து பேசிய மலையாள நடிகை சம்யுக்தா குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார் வைரமுத்து

  தமிழ்த் திரையுலகை கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தமிழால் ஆக்கிரமித்து வைத்திருப்பவர் வைரமுத்து. பாடலாசிரியர், கவிஞர் என்று சொன்னாலே ஒவ்வொரு தமிழ் ரசிகனுக்கும் ’வெள்ளை ஜிப்பா’ உடுத்திய இந்த கம்பீர கவிஞனின் முகம்தான் முதலில் நினைவுக்கு வரும்.

  1980-ம் ஆண்டு பாராதிராஜா இயக்கிய நிழல்கள் திரைப்படத்திற்காக தன் முதல் திரைப் பாடலை எழுதினார் வைரமுத்து. ஆரம்ப காலத்தில் இளையராஜாவுடன் கூட்டணி அமைத்து இவர் எழுதிய எண்ணற்ற பாடல்கள், இந்த கூட்டணி தொடர்ந்திருக்க கூடாதா என ஒவ்வொரு இசை பிரியர்களையும் இன்றளவும் ஏங்க வைக்கிறது.

  Also Read: ஆயிரம் கோடியை தாண்டி வசூலித்த தமிழக தியேட்டர்ஸ்! கல்லா கட்டிய 2022!

  இளையராஜாவால் அறிமுகம் கிடைத்தாலும் ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்கு பின்னரே சர்வதேச எல்லைகளை தன் தமிழ் கடந்ததாக பல மேடைகளில் கூறியுள்ளார் வைரமுத்து. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ’முதல் மரியாதை’ படத்தின் அனைத்து பாடல்களுக்காக முதல் முறையாக சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதை பெற்ற வைரமுத்து அதன்பின் ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக் காற்று, தர்மதுரை படங்களின் பாடல்களுக்காக பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தார்.

  இந்நிலையில் மலையாள நடிகை சம்யுக்தா, வைரமுத்துவின் பாடல் வரிகளை சிலாகித்து பேசிய வீடியோ சோஷியம் மீடியாவில் வைரலானது. அது குறித்து ட்வீட் செய்துள்ள வைரமுத்து, ''மலையாளம் நனைந்த தமிழில் என் பாட்டு வரிகளை நீ சொல்லச் சொல்லப் பரவசமானேன் மகளே! தமிழும் மலையாளமும் உறவு மொழிகள் நாம் கலையால் ஒன்றுபடுவோம்; காலத்தை வென்றுவிடுவோம்'' எனக்குறிப்பிட்டுள்ளார்.

  அந்த வீடியோவில் பேசும் நடிகை சம்யுக்தா, ''வைரமுத்து சார் என்னுடைய பேவரைட். சினிமா பாட்டுக்கு கவிதைகளாகவும் இருக்கும். பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம், காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பெயரைக்கேட்டேன், காதல் என்றாய்., நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா போன்ற வரிகளை சுட்டிக்காட்டுகிறார்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Fahadh Faasil, Poet vairamuththu, Vairamuthu