முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''அவளே பாதுகாப்பாள் ஆண்களையும்...'' மகளிர் தினத்துக்கு கவிதை மூலம் வாழ்த்து சொன்ன வைரமுத்து

''அவளே பாதுகாப்பாள் ஆண்களையும்...'' மகளிர் தினத்துக்கு கவிதை மூலம் வாழ்த்து சொன்ன வைரமுத்து

வைரமுத்து

வைரமுத்து

ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண: நம்பிக்கை கேட்கிறாள் என வைரமுத்து கவிதை வெளியிட்டிருக்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகளிர் தின கவிதை ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

அவரது பதிவில்,

மாலையும் நகையும்

கேட்கவில்லை பெண்;

மதித்தல் கேட்கிறாள்

வீடும் வாசலும்

விரும்பவில்லை பெண்;

கல்வி கேட்கிறாள்

ஆடம்பரம் அங்கீகாரம்

ஆசைப்படவில்லை பெண்;

நம்பிக்கை கேட்கிறாள்

கொடுத்துப் பாருங்கள்;

அவளே பாதுகாப்பாள்

ஆண்களையும்

உலக

மகளிர் திருநாள் வாழ்த்து

என்று பதிவிட்டுள்ளார். வைரமுத்துவின் பதிவு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது.

First published:

Tags: Vairamuthu