Home /News /entertainment /

''சென்னை நனைகிறது; மே மாதம் பனிக்கட்டியாகிறது.'' - கவிதை மழை பொழிந்த வைரமுத்து

''சென்னை நனைகிறது; மே மாதம் பனிக்கட்டியாகிறது.'' - கவிதை மழை பொழிந்த வைரமுத்து

கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து

வங்கக் கடலில் உருவான அசானி புயல் காரணமாக சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
சென்னையின் மழை குறித்து கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ள கவிதை, அதிக விருப்பங்களை பெற்று வருகிறது.

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில வாரங்களாக வெயில் அதிகம் காணப்படுகிறது. இதனால் மழை வராதா என்ற ஏக்கத்தில் தமிழக மக்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் வங்கக் கடலில் உருவான அசானி புயல் காரணமாக சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

'சென்னை நனைகிறது

மே மாதம் பனிக்கட்டியாகிறது

ஆடையோடு குளியல் கொள்ளும் தாவரங்கள்

மழை ஓசை எல்லா சங்கீதங்களையும் சாகடிக்கிறது

நுரையீரலில் நிறைகிறது மழைவாசனை

நான் என் தேநீருக்குள் சுடவைத்துக் கொண்டிருக்கிறேன் ஒரு பாடலை'
என்று கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த கவிதை அதிக விருப்பங்களை பெற்று வருகிறது.



இதற்கிடையே, சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது 'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா

மேலும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று( மே10) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க - கே.ஜி.எஃப் 2 படத்தை பார்த்து ரசித்த இசைஞானியும் கலைஞானியும்!

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Vairamuthu

அடுத்த செய்தி