Home /News /entertainment /

எப்படி இருக்கிறது பாரதிராஜாவின் உடல்நிலை? முதல்வருடன் சென்று சந்தித்த பின்னர் வைரமுத்து விளக்கம்

எப்படி இருக்கிறது பாரதிராஜாவின் உடல்நிலை? முதல்வருடன் சென்று சந்தித்த பின்னர் வைரமுத்து விளக்கம்

பாரதிராஜாவை நலம் விசாரிக்கும் மு.க.ஸ்டாலின், வைரமுத்து

பாரதிராஜாவை நலம் விசாரிக்கும் மு.க.ஸ்டாலின், வைரமுத்து

பாராதிராஜா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து மு.க. ஸ்டாலின் அவர்கள் என்னிடம் செல்போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வந்தார். – வைரமுத்து

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து கவிப்பேரரசு வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த தகவல்கள் பாரதிராஜாவின் நலம் விரும்பிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில நாட்களாக நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா, நேற்று மாலை வீடு திரும்பினார்.

    நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர் கே.என்.நேரு, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    உடல் எடையை அதிரடியாக குறைத்த வரலட்சுமி சரத்குமார்… கவனம் ஈர்க்கும் ஃபோட்டோஸ்…

    இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வைரமுத்து கூறியதாவது-

    இயக்குனர் இமயம் பாரதிராஜா நலமுற்று விட்டார். வீடு திரும்பி விட்டார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீட்டுக்கு வந்திருந்து அவரை நலம் விசாரித்தார் நம்பிக்கை கொடுத்தார். பாசமொழி பொழிந்தார்.



    முத்தமிழறிஞர் கலைஞர் பாரதிராஜா மீது தனி பற்று உடையவர். அதே பற்று பாசம் மகிழ்ச்சி நல் உறவை பாரதிராஜாவின் மீது தமிழ்நாட்டு முதலமைச்சரும் காட்டுகின்றபோது நாங்கள் மிகவும் மகிழ்ந்து போனோம்.

    பாராதிராஜா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து மு.க. ஸ்டாலின் அவர்கள் என்னிடம் செல்போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வந்தார். பாரதிராஜாவின் துணைவியார் இடமும் அடிக்கடி நலம் விசாரித்து தன்னுடைய நல்லெண்ணத்தை தெரியப்படுத்திக் கொண்டிருந்தார்.
    இன்று வீடு திரும்பினார் என்று கேள்விபட்டதும் காலை அவர் இல்லத்திற்கு வந்து தன்னுடைய அன்பை தெரிவித்து விட்டுப் போனார்.

    அதர்வா நடிக்கும் ட்ரிக்கர் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகிறது…

    ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களின் நலன் கேட்பதோடு தமிழ்நாட்டு கலைஞர்கள் மீதும் தனி அக்கறையும் அன்பும் காட்டுவது தான் ஒரு சமுதாயத்தின், மனித வளத்தை மேம்படுத்த கூடியதாக இருக்கும்.

    அந்த வகையில் தமிழ்நாட்டு மனித வளத்தை மேம்படுத்தக்கூடிய நல்லதொரு திருப்பணியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆற்றியிருக்கிறார்.

    பாரதிராஜா விரைவில் நலம் பெறுவார் அவர் ஒரு சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதை தவிர வேறு பின்னடைவு ஏதும் இல்லை.  மருந்துகளின் பக்க விளைவும் ஒரு நீண்ட களைப்பும் அவருக்கு இருக்கிறது. மருந்துகள் குறைய குறைய உடல் நலமுடன் மீண்டு வருவார். களத்திலும் கலையிலும் தன் முத்திரைகளை பதிப்பார்.

    இவ்வாறு வைரமுத்து கூறினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Bharathiraja

    அடுத்த செய்தி