Home /News /entertainment /

தெருக்குரல் அறிவு மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்... இயக்குநர் பா.ரஞ்சித் காட்டம்

தெருக்குரல் அறிவு மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்... இயக்குநர் பா.ரஞ்சித் காட்டம்

பா ரஞ்சித் - தெருக்குரல் அறிவு

பா ரஞ்சித் - தெருக்குரல் அறிவு

சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் இந்திய பதிப்பின், ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

    ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டைப்படத்தில் பாடலாசிரியர் தெருக்குரல் அறிவு இடம்பெறாததற்கு இயக்குநர் பா.ரஞ்சித் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

    இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் முணுமுணுக்கச் செய்த இந்த பாடல், இதுவரை யூ-ட்யூபில் 319 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

    தவிர, 'நீயே ஒளி’ என்ற பாடலை தெருக்குரல் அறிவுடன், ஷான் வின்செண்ட் டீ பால் எழுதி, அவரே பாடியிருந்தார். இந்தப் பாடல் சார்பட்டா பரம்பரை படத்திலும் இடம்பெற்றது. அந்த வெர்சனை அறிவு எழுதி, சந்தோஷ் நாராயணன் பாடியிருந்தார்.



    இந்நிலையில் சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் இந்திய பதிப்பின், ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் 'எஞ்சாய் எஞ்சாமி' மற்றும் நீயா ஒளி பாடல்களின் சர்வதேச சாதனைகளை பாராட்டும் வகையில் பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பாடலாசிரியர் அறிவின் படம் இடம்பெறவில்லை. இது குறித்து இணையத்தில் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து. தெருக்குரல் அறிவு மீண்டும் ஒருமுறை மறைக்கடிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். ரோலிங் ஸ்டோன் இந்தியா மற்றும் மாஜா, இந்த இரண்டு பாடல்களின் வரிகளுமே, பொதுவெளி அங்கீகாரம் அழிக்கப்படுவதற்கு எதிரான சவால்தான் என்பதை புரிந்துகொள்வது அவ்வளவு கஷ்டமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி