சினேகனின் கார் மோதிய விபத்து - இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணம்

கவிஞர் சினேகனின் கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சினேகனின் கார் மோதிய விபத்து - இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணம்
கவிஞர் சினேகன்
  • Share this:
கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பின்னர் படிப்படியாக வளர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் பாடல் எழுதி மக்களிடம் பிரபலமானவர் சினேகன். தனது ஆயிரக்கணக்கான பாடல்களால் கவனம் ஈர்த்த சினேகன் அமீர் உடன் ‘யோகி’ படத்தில் நடிகராகவும், பாடகராகவும் அறிமுகமானார்.

கவிஞர், நடிகர், பாடகர் மட்டுமல்லாது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சினேகனுக்கு அந்நிகழ்ச்சி இன்னும் அதிகமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த சினேகனுக்கு அக்கட்சியில் மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

படிக்க: பல பெண்களை ஏமாற்றிய காசி வழக்கில் திடீர் திருப்பம் - சிக்கிய தந்தை


கடந்த 16-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சவேரியார்புரத்தில் கவிஞர் சினேகனின் கார் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இரு சக்கர வாகனத்தில் சென்ற ஊனையூரைச் சேர்ந்த   அருண்பாண்டி என்பவர் தலையில் பலத்த காயமடைந்து சென்னை - போரூரில் உள்ள ராஜிவ் காந்தி அரசு  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அருண் பாண்டியன் உயிரிழந்தார் . காரை ஓட்டிச் சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளரும் கவிஞருமான சினேகன் மீது  கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் மற்றும் விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு  செய்துள்ள நிலையில் தற்போது இளைஞர் அருண் பாண்டியன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading