• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கன்னிகாவை கரம்பிடிக்கும் கவிஞர் சினேகன்..

கன்னிகாவை கரம்பிடிக்கும் கவிஞர் சினேகன்..

கவிஞர் சினேகன்

கவிஞர் சினேகன்

திருமண விழா உங்கள் அனைவரின் முன்னிலையிலும், உங்களின் அன்புக்கு மத்தியிலும் நடக்க வேண்டும் என்பதே என் பெரும் ஆவல்.

  • Share this:
    கவிஞர் சினேகன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் ஜூலை 29-ஆம் தேதி திருமணம் செய்து கொள்கிறார்.

    கவிஞர் சினேகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கும் , கன்னிகாவிற்கும் வருகிற 29-07- 2021 வியாழன் அன்று சென்னையில் உலக நாயகன் நம்மவர் மக்கள் நீதி மய்யத் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் திருமணம் நடைபெற இருக்கிறது.

    இந்த திருமண விழா உங்கள் அனைவரின் முன்னிலையிலும், உங்களின் அன்புக்கு மத்தியிலும் நடக்க வேண்டும் என்பதே என் பெரும் ஆவல். அது முடியாத சூழ் நிலையில் காலம் நம்மை நகர்த்தி செல்கிறது என்பதால் உங்கள் அனைவரையும் அழைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் வேரோடிக் கொண்டிருக்கிறது. அது நீங்களும் அறிந்ததே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் கூடி மகிழ்வது மனிதர்களுக்கே பேராபத்தாக இருப்பதால். நம் அனைவரின் நலன் கருதி மிக எளிமையாகவும் , தனி மனித இடைவெளியோடும். அரசு விதி முறைகளோடும் நடைபெறுகிறது. எனவே தளர்வுகளுக்கு பின் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: