அவர் எங்கள் காட்டில் சிங்கம்... நா.முத்துக்குமார் மகன் எழுதிய கவிதை

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி அவரின் மகன் ஆதவன் தனது தந்தைக்காக கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார்.

அவர் எங்கள் காட்டில் சிங்கம்... நா.முத்துக்குமார் மகன் எழுதிய கவிதை
நா.முத்துக்குமார் மற்றும் அவரது மகன்
  • Share this:
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்த நா.முத்துக்குமார் இயற்பியல் மாணவர். ஆனால் தமிழ் மீதுள்ள காதலால் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலை பயின்றார். யாப்பிலக்கணத்தை முறையாக பயின்றவர் என்றாலும் அவரது கவிதைகள் பாமரனுக்கும் சரியாய் பாடம் நடத்தும் அளவிற்கு எளிமை கொண்டவை.

இயக்குநராகும் ஆசையில் திரைத்துறைக்கு வந்தவர், தன் கவிதைகளால் ரசிகர்களை மயக்குபவராக மாறிப்போனார். சுமார் 1,500 திரைப்பட பாடல்கள் மட்டுல்லாது தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன் போன்ற பல கவிதை தொகுப்புகளையும், சில்க்சிட்டி என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

தங்க மீன்கள், சைவம் ஆகிய படங்களில் பாடல் எழுதியதற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற கவிஞர் நா.முத்துக்குமார், மாநில விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.  மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கட்டிருந்த அவர், 41-வது வயதில் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு ஜீவலட்சுமி என்ற மனைவியும், ஆதவன் என்ற மகனும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
இன்று நா.முத்துக்குமாருக்கு பிறந்தநாள் என்பதால் திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் சமூகவலைதளங்களில் அவர் பற்றியும் அவரது படைப்புகள் குறித்தும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவரது மகன் ஆதவன் தனது தந்தைக்கு கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கவிதை இதோ:என் தந்தை

என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.

அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்

என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்

அவர் எங்கள் காட்டில் சிங்கம்

என் தந்தையின் வரிகள் முத்து

அவர்தான் எங்களின் சொத்து

என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்

அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்

என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா

எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா

எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா

இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா

                               - ஆதவன் முத்துக்குமார்.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading