ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘இரண்டே நிமிடத்தில் படத்திற்கு ஓகே சொன்னார் சுபாஸ்கரன்…’ – பொன்னியின் செல்வன் உருவானதை பகிர்ந்த மணிரத்னம்

‘இரண்டே நிமிடத்தில் படத்திற்கு ஓகே சொன்னார் சுபாஸ்கரன்…’ – பொன்னியின் செல்வன் உருவானதை பகிர்ந்த மணிரத்னம்

பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்டில் மணிரத்னம், சுபாஸ்கரன், விக்ரம், கார்த்தி.

பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்டில் மணிரத்னம், சுபாஸ்கரன், விக்ரம், கார்த்தி.

இந்த தலைமுறையினரும் படத்தை கொண்டாடுகின்றனர்.  படத்தை பார்த்து விட்டோம்,  புத்தகத்தையும் ஒரு முறை படிக்கிறோம் என்று தெரிவிக்கின்றனர். - நடிகர் விக்ரம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பது குறித்து தயாரிப்பாளர் சுபாஸ்கரனிடம் பேசியபோது, இரண்டே நிமிடத்தில் படத்திற்கு ஓகே சொன்னதாக இயக்குனர் மணிரத்னம் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.  இந்த திரைப்படம் உலக அளவில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

அதில் தமிழகத்தில் மட்டும் 234 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ரசிகர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.  இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, இயக்குனர் மணிரத்னம்,  தயாரிப்பாளர் சுபாஷ்கரன், தமிழ் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கல்கி அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நிதியுதவி… பொன்னியின் செல்வன் படக்குழு வழங்கியது…

விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு ஒவ்வொரு நாள் செல்லும் போதும் கோவிலுக்கு செல்வது போல் இருந்தது. மேலும் புது அனுபவமாகவும் உணர்ந்தோம். இந்த அனுபவம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் சொல்ல முடியும் என கூறினார். இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்கு, இறைவனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கார்த்தி பேசினார்.

நடிகர் விக்ரம் பேசுகையில் பொன்னியின் செல்வன், படம் என்பதை விட, அது ஒரு உணர்ச்சி, எமோஷன் என நெகிழ்ந்தார். இந்த தலைமுறையினரும் படத்தை கொண்டாடுகின்றனர்.  படத்தை பார்த்து விட்டோம்,  புத்தகத்தையும் ஒரு முறை படிக்கிறோம் என்று தெரிவிக்கின்றனர். இது மகிழ்ச்சியாக உள்ளது.  இந்த படத்திற்காக டிவிட்டர், பேஸ்புக் போன்ற இணையதளங்களில் பார்த்துக் கொண்டே இருந்தேன். வீட்டில் இருந்தவர்கள் அடுத்த படத்திற்கு செல்ல வேண்டும் அது இதிலிருந்து வெளியே வா என்று கூறினார்கள் எனவும் தெரிவித்தார்.

WATCH – வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லவ் டுடே’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ…

இந்த திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் மீது இருக்கும் அன்பு,  எங்களை வந்து சேர்ந்து உள்ளது எனவும் விக்ரம் நெகிகழ்ந்தார். அத்துடன் சக நடிகர்களுக்கும் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

அதேபோல் மணிரத்னம் பேசுகையில் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று சுபாஷ்கரனிடம் கூறினேன். இரண்டே நிமிடத்தில் பண்ணலாம் என்று கூறினார். அதன் பிறகு பொன்னியின் செல்வன் உருவாகியது.  இந்த படத்தில் பணியாற்றிய கார்பென்டர், மேக்கப் கலைஞர்கள் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

Published by:Musthak
First published:

Tags: Ponniyin selvan