Home /News /entertainment /

RRR: தமிழகத்தில் சாதனைப் படைத்த ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர்!

RRR: தமிழகத்தில் சாதனைப் படைத்த ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர்!

எஸ்.எஸ்.ராஜமெளலி

எஸ்.எஸ்.ராஜமெளலி

தமிழகத்தில் மட்டும் இப்படம் 550 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது. மொழி பெயர்க்கப்பட்ட ஒரு படத்தை இத்தனை திரையரங்குகளில் வெளியிடுவது இதுவே முதல் முறை

    ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில், டிவிவி தானய்யா தயாரித்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தை, தமிழகத்தில் 550 திரையரங்குகளில் சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

    மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே டிவிவி தானய்யா தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), இந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. பிரமாண்ட படங்கள் மூலம் தனக்கென தனியிடம் பிடித்துள்ள லைகா, இத்திரைப்படத்தையும் தனக்கே உரிய பாணியில் மிகப்பெரிய முறையில் வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தில் மட்டும் இப்படம் 550 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது. மொழி பெயர்க்கப்பட்ட ஒரு படத்தை இத்தனை திரையரங்குகளில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இது ராஜமௌலியின் முந்தைய வெளியீடான பாகுபலியை விட 150 திரையரங்குகள் அதிகமாகும்.

    சன் டிவி எதிர்நீச்சல் சீரியலால் வெடித்த சர்ச்சை... இயக்குநர் திருச்செல்வம் சொல்வது என்ன?

    ஆர் ஆர் ஆர் படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர். ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.

    படையப்பா படத்தில் வரும் இந்த குழந்தை இன்று பிரபல சீரியல் நடிகை!

    இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு. இதில் ராம் சரணின் காதலி சீதாவாக ஆலியா பட் நடித்துள்ளார். தவிர ஒலிவியா மோரிஸ், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajamouli, Ram Charan

    அடுத்த செய்தி