ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Lyca Productions: இளம் இயக்குநர்களிடமிருந்து நல்ல கதைகளை எதிர்பார்க்கும் லைகா!

Lyca Productions: இளம் இயக்குநர்களிடமிருந்து நல்ல கதைகளை எதிர்பார்க்கும் லைகா!

லைகா புரொடக்‌ஷன்ஸ்

லைகா புரொடக்‌ஷன்ஸ்

இந்தியன் 2 திரைப்படம் இயக்குனர் ஷங்கருடனான பிரச்சனையில் பாதியில் நிற்பது அறிந்ததே.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கத்தி, 2.0, காப்பான், தர்பார் உள்பட பல பிரமாண்டப் படங்களை தயாரித்த லைகா நிறுவனம் இயக்குனர்களுக்கு புதிய பட வாய்ப்புகளை அறிவித்துள்ளது.

லைகா நிறுவனம் தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், இந்தியில் அக்‌ஷய் குமாரின் ராம் சேது உள்பட பல படங்களை தயாரித்து வருகிறது. அவர்களின் இந்தியன் 2 திரைப்படம் இயக்குனர் ஷங்கருடனான பிரச்சனையில் பாதியில் நிற்பது அறிந்ததே. இந்நிலையில், தனது புதிய தயாரிப்புக்காக இயக்குனர்களிடம் கதை கேட்க முடிவு செய்து அறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நல்ல கதைகள் வைத்திருக்கும் இயக்குனர்கள் அவர்களின் முழ விவரத்துடன் கதைச்சுருக்கத்தை எழுதி, story@lycaproductions.in என்ற மெயிலுக்கு அனுப்ப கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கதைப் பிடித்திருந்தால், அந்த இயக்குனருக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல பெரிய பட்ஜெட் படங்கள் இயக்குனரின் பெயரை நம்பி எடுத்து, நஷ்டமடைந்ததால் இந்த முடிவை லைகா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இனிமேல் கதைக்கு முக்கியத்துவம் தர இருக்கிறார்களாம். தகுதியுள்ள இயக்குனர்கள் தங்கள் திறமையை சோதித்துப் பார்க்கலாம்.

கதையை யார் தேர்வு செய்வார்கள்? ஒருவரா இல்லை குழுவா? என்பது போன்ற தகவல்களை லைகா வெளியிடவில்லை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Tamil Cinema