ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரிலீஸ் தேதி அறிவிப்பா? நாளை பொன்னியின் செல்வன் 2 அப்டேட்!

ரிலீஸ் தேதி அறிவிப்பா? நாளை பொன்னியின் செல்வன் 2 அப்டேட்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் 2 தொடர்பான அப்டேட் நாளை வெளியாகவுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

கல்கி எழுதிய வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கியிருந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்த இந்தப் படத்தை குடும்பம் குடும்பமாக சென்று திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கினர். இந்திய அளவில் இந்தப் படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2023 ஆம் ஆண்டு சம்மரில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் பொன்னியின் செல்வன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்தார். ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகம் குறித்த அப்டேட் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என லைக்கா நிறுவனம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பொன்னியின் செல்வன் பட வெளியீட்டுத் தேதியாகத் தான் இருக்கும் என ரசிகர்கள் யூகிக்கத் துவங்கியுள்ளனர். உதயநிதி சொன்னது போல் பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகுமா என்பது நாளை தெரிந்துவிடும்.பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும் நடித்திருந்தனர். மேலும் நாவலில் மிகவும் புகழ்பெற்ற வேடமான நந்தினி என்ற கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் மிரட்டினார். பொன்னியின் செல்வனை படித்துவிட்டு படம் பார்த்தவர்களுக்கு மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்கள் மீது மாற்றுக்கருத்திருந்திருக்கலாம். ஆனால் நந்தினி கதாப்பாத்திரத்துக்கு ஐஸ்வர்யா ராயைத் தவிர நந்தினி வேறு யாரையும் யோசித்து கூட பார்த்திருக்க முடியாது. மேலும்

அதே நேரத்தில் அழகும், ஆண்கள் மட்டுமே நிறைந்த சோழ அமைச்சரவையை கட்டுப்படுத்தும் கம்பீரமும் என குந்தவையாக திரிஷா ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.

இந்தப் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுத, இளங்கோ குமாரவேல் மணிரத்னத்துடன் இணைந்து திரைக்கதை எழுதினார். பொன்னியின் செல்வனைப் பொறுத்தவரை, கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர் போல மற்ற மாநிலங்களில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தமிழகத்திலும், வெளிநாடுகளில் மட்டுமே இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றது. இருப்பினும் இந்தப் படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்தது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தைப் பார்ப்பதை ரசிகர்கள் பெருமையாக கருதியது படத்தின் வசூலுக்கு காரணம்.

First published:

Tags: A.R.Rahman, Mani ratnam, Ponniyin selvan