முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பொன்னியின் செல்வன் சம்பள பிரச்னை.. நடிகருக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பஞ்சாயத்து.. தேடி வந்த ஊதியம்!

பொன்னியின் செல்வன் சம்பள பிரச்னை.. நடிகருக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பஞ்சாயத்து.. தேடி வந்த ஊதியம்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

அவருக்கான ஊதியமும் அளிக்கப்படவில்லை என பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் மணிரத்னம் இயக்கிய படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து இதன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த இந்தப் படம் இந்திய அளவில் இந்த படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் குடந்தை ஜோதிடர் வேடத்தில் பழம்பெரும் நடிகர் காத்தாடி ராமமூர்த்தி நடித்திருந்தார். எதிர்பாராதவிதமாக படத்தின் நீளம் கருதி அவரது காட்சிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் அவருக்கான ஊதியமும் அளிக்கப்படவில்லை என பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது புதிய பதிவில், சமீபத்தில் தனக்கு ஊதியம் அளிக்கப்பட்டுவிட்டதாக கூறினார் என்ற தகவலை பகிர்ந்திருக்கிறார். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுத்த லைக்கா நிறுவனத்துக்கு தனது பதிவில் நன்றியும் தெரிவித்தார்.

First published:

Tags: Ponniyin selvan